நீ ஒரு புதிர்
விலகி சென்றால் அணைக்கிறாய்.. நெருங்கி வந்தால் தடுக்கிறாய்.. உன்னை புரிந்து கொள்ள உனை படைத்த பிரம்மனாலும் இயலாது.
பாவையின் பார்வை
உன் கண்கொண்டு வைரங்களை பார்க்காதே, அவையும் தன்னை மறந்து ஒளிராமல் இருந்துவிடும்.
ஏக்கம்
உன் வீட்டு ரோஜா செடியின் மொட்டுகளிடம் கேட்டேன். ஏன் மலரவில்லை என்று. அவையும் தன் இதழ் குவித்து உன்னை முத்தமிட காத்து கொண்டிருகின்றனவாம்!!
சிதறிய நட்சதிரங்கள்
வானில் சிதறி கிடக்கும் நட்சதிரங்கள் கூட நீ வெட்டும் போது சிதறிய உன் நக துண்டுகளுக்கு ஈடாகாது!
காதல் மை
உன் பேனாவில் காதல் என்னும் மை இருந்தால் அவளின் ஒற்றை முடிகற்றை கொண்டு கூட ஓராயிரம் கவிதை எழுத முடியும்.
சண்டையிட ஆசை
நீ சமாதான படுத்தும் அழகை ரசிப்பதர்க்காகவே, உன்னிடம் சண்டையிட ஆசை வருகிறது!
கொடுத்துவைத்த பூ
செடி கொடுத்து உன் கூந்தலில் நீ வைத்த பூ தான் கொடுத்துவைத்த பூவோ!சிவந்த கண்கள்
ஆசையாய் நான் கிள்ளிய உன் கன்னம் சிவந்து விட்டது. அதை கண்ட கணத்திலே என் கண்கள் கலங்கி விட்டது
செந்நிற வானவில்
வானவில்லை பார்த்தேன் அதில் எனக்கு தெரிந்ததெல்லாம் உன் செவிதழின் நிறம் மட்டுமே!
இரவில் வரும் சூரியன்
வெட்கத்தில் சிவக்கும் உன் கன்னங்களை எனக்கு காட்ட.. சூரியனும் இரவில் வரும் !! புயல் காற்று
அவள் நினைவுவாக துப்பட்டாவை புயலாக வந்து தூக்கி சென்றது காற்று. அதை என்னிடம் சேர்த்தது நேற்று. காதல்
காதல் என்பது எனக்கு ஒரு வார்த்தையாகவே இருந்திருக்கும். உன்னை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்!! பூமி பெண்
தலை குனிந்து நடக்கும் உன் அழகை கண்டு பூமியும் உன்னை காதலித்துவிடுமோ என்று அஞ்சினேன். நல்லவேளை பிழைத்தேன் பூமியும் ஒரு பெண் என்பதால்!! (இது நான் எங்கோ ரசித்தது)
கடைசில என்னையும் கவிஞன் ஆகிட்டாங்களே!!
0 comments:
Post a Comment