Join The Community

Premium WordPress Themes

Search

Saturday, June 25, 2011

காதலை சொல்ல ஆயிரம் வழி, அதில் இது தனி வழி

ரமேஷ், சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து வந்தனர். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த வள்ளியை (பெயர் மாற்றப்படவில்லை. ஏன்னா இந்த கதைல ஒரு பாட்டு இருக்கு. அதுக்கு அந்த பேரு வேணும்) இருவருக்கும் நன்றாக தெரியும். வள்ளி அழகான, புத்திசாலியான பொண்ணு சுருக்கமா சொன்ன "சூப்பர் பிகரு" ரமேஷ்க்கு வள்ளி மேல் காதலோ காதல். சுரேஷ்க்கு ரமேஷ் வள்ளிய காதலிக்கிறது தெரியும். தினமும் கவிதைங்கிற பேருல சுரேஷ் காதுல்ல கடப்பாறைய இறக்குவான்.
இப்படியே ஒரு 6 மாதம் போச்சு. "இந்த காதலர் தினத்துல என்னோட காதல வள்ளிகிட்ட சொல்லபோறேன்" ன்னு ரமேஷ் சுரேஷ் கிட்ட சொன்னான். அதகேட்ட சுரேஷ் ரமேஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவன உற்சாக படுத்துனான்.



அந்த காதலர் தினமும் வந்தது ரமேஷ் டிப்டாப்பா கைல ஒரு ரோஜா வச்சிக்கிட்டு வள்ளிய எதிர்பாத்து காத்துகிட்டு இருந்தான் (வள்ளிவரபோற... துள்ளிவரப்போற இந்த இசை பின்னணில ஒலிச்சிகிட்டே இருந்தது). வள்ளி வந்தாள். அவள் ரமேஷிடம் பேசகூடவில்லை. ரமேஷ் துவண்டு போனான். இரவெல்லாம் தூக்கமில்லை ஒரே புலம்பல்.
ஏன் வள்ளி ரமேஷை ஒதுக்குறான்னு விசாரிச்சதில். எல்லாத்துக்கும் காரணம் இந்த சுரேஷ் என்ன்பது தெரிந்தது. சுரேஷ் காதலர் தினத்துக்கு முந்தயதினம் வள்ளியை வெளியே பார்த்திருக்கிறான். பார்த்ததோடு இல்லாமல் அவளிடம் சென்று "I Love You" ன்னு சொல்லி இருக்குறான் படுபாவி. வள்ளியோட ரியாக்சன் மாறிட்டு, உடனே அந்த பய புள்ள "நான் இல்லை ரமேஷ் சொல்ல சொன்னான்" ன்னு சொல்லி இருக்குறான். வள்ளியோ ரமேஷ் என்னைவிட சின்னபையன் எனக்கு தம்பி மாதிரின்னு சொல்லிட்டு போய்டாலாம்.
ரமேஷோ மனமுடைந்து போயிட்டான். ரமேஷை எப்படி இதை தாங்க போறானோ தெரியல. அட நமக்கு அதுவா முக்கியம், சுரேஷின் ஐடியா நல்லா இருக்குது அதுதான் முக்கியம்.
ஓட்ட போடுங்க. திட்ட ஆசை படுறவங்க கமெண்ட் போட்டு திட்டலாம்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...